குவான்ட்டோவிலும் கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன்!
கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன்(ஏஎம்டி) தற்போது இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.
மாருதி செலிரியோ, இன்று அறிமுகமான டாடா ஸெஸ்ட் காம்பெக்ட் செடான் கார்களைத் தொடர்ந்து, மஹிந்திரா குவான்ட்டோவிலும் இதே வகை டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளட்ச் பெடல் இல்லாமல் வரும் இந்த புதிய மாடலில் கைகளால் கியர்களை மாற்றும் வசதி கொண்டதாக வரும் இந்த புதிய டிரான்ஸ்மிஷன் குவான்ட்டோவின் விற்பனையை உயர்த்த நிச்சயம் உதவி புரியும் என மஹிந்திரா நம்புகிறது.
வாடிக்கையாளர் மத்தியிலும் இந்த புதிய டிரான்ஸ்மிஷன் அமைப்பு ஆவலை ஏற்படுத்தியுள்ளது டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய டிரான்ஸ்மிஷன் கொண்ட குவான்ட்டோ அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








