2015ல் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல்!
அடுத்த ஆண்டு மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்கார்ப்பியோ மற்றும் சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனங்களின் எஸ்யூவி மாடல்களுக்கு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை ஆஸ்திரேலியாவின் டிரைவ்ட்ரெய்ன் சிஸ்டம் நிறுவனம் சப்ளை செய்து வந்தது.

இந்த நிலையில், ட்ரைவ்ட்ரெய்ன் சிஸ்டத்தை சீனாவை சேர்ந்த கீலீ ஆட்டோமொபைல் நிறுவனம் கையகப்படுத்தியதையடுத்து, மஹிந்திரா, சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கான ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் சப்ளை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, தற்போது ஜப்பானிய நிறுவனமான ஐசின் செய்கி என்ற நிறுவனத்திடமிருந்து ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை சப்ளை பெற மஹிந்திரா ஒப்பந்தம் செய்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்100 என்ற புதிய காம்பெக்ட் எஸ்யூவியில் ஐசின் செய்கி நிறுவனத்தின் புதிய 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. இதே ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை மஹிந்திராவின் எக்ஸ்யூவி 500விலும் பொருத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதனை சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஒய் எல் லீ உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை இரு கார்களில் பொருத்துவதன் மூலம், குறிப்பிடத்தக்க அளவு தயாரிப்பு செலவீனத்தை மிச்சப்படுத்த முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








