மஹிந்திரா எக்ஸ்யூவி 500வை வாங்குவதற்கு மற்றுமொரு காரணம்!
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி எப்போதும் பணத்திற்கு ஏற்ற வசதிகளுடன் மதிப்புமிக்க மாடலாக விளங்கி வருகிறது. போட்டியை சமாளிக்கும் விதத்தில் குறைவான விலையில் புதிய பேஸ் மாடலும் விற்பனைக்கு விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மஹிந்திரா எக்ஸ்யூவி 500வில் புதிய வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வேரியண்ட்டை பொறுத்து 4 விதமான புதிய வண்ணக்கலவையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 தற்போது வந்துள்ளது.

டபிள்யூ4 பேஸ் மாடலில் டால்ஃபின் கிரே வண்ணம் கருப்பு மற்றும் வெள்ளை நிற கலவையில் கிடைக்கும். இதேபோன்று, டபிள்யூ 6 என்ற மிட் வேரியண்ட் தற்போது சாட்டின் ஒயிட் மற்றும் டால்ஃபின் கிரே வண்ணங்களில் கிடைக்கும்.
இதுதவிர, டபிள்யூ 8 டாப் வேரியண்ட் தற்போது ஆர்டிக் புளூ மற்றும் ஒபுலென்ட் பர்ப்புள் என்ற புதிய வண்ணங்களிலும் கிடைக்கும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி வண்ணத்திலும், வசதிகளில் மட்டுமல்ல 140 எச்பி ஆற்றலை வழங்கும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சினுடன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சிறந்த எஸ்யூவி மாடலாக விளங்குகிறது.
தற்போது 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கிடைக்கிறது. அடுத்த ஆண்டு புதிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலையும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








