விரைவில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500வின் ஸ்பெஷல் எடிசன் மாடல்!
மஹிந்திராவின் வெற்றிகரமான எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கூடுதல் வசதிகளுடன் தோற்றத்தில் கவர்ச்சியான அம்சங்களுடன் இந்த புதிய மாடல் வருமென டீம் பிஎச்பி தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றங்களும் இருக்காது.

ஸ்போர்ட்ஸ் என்ற வார்த்தையுடன் பாடி டீக்கெல், வெள்ளை வண்ணத்தில், கருப்பு நிற இன்டிரியருடன் புதிய எக்ஸ்யூவி 500 வர இருக்கிறது.
ஸ்பெஷல் எடிசனில் புதிய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் ரிவர்ஸ் கேமரா போன்றவை நிரந்தர அம்சங்களாக இருக்கும். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை மஹிந்திரா விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..


Click it and Unblock the Notifications








