விற்பனையில் 75,000ஐ கடந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500!!
இதுவரை 75,000க்கும் அதிகமான எக்ஸ்யூவி500 எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 27 மாதங்களில் இந்த புதிய மைல்கல்லை எக்ஸ்யூவி500 கடந்துள்ளது.

மொத்தம் 25 ஆட்டோமொபைல் விருதுகளை வென்றுள்ளது. டிஎன்எஸ் ஆட்டோமோட்டிவ் நடத்திய ஆய்வில் வாடிக்கையாளர் திருப்தியில் 2012ம் ஆண்டின் சிறந்த எஸ்யூவியாக முதல் இடத்தை பெற்றது.
இந்த நிலையில், போட்டியாளர்களால் நெருக்கடிக்கு உள்ளானதால், கடந்த ஆண்டு நவம்பரில் குறைவான விலையில் டபிள்யூ4 என்ற புதிய வேரியண்ட் சேர்க்கப்பட்டது. இந்த மாடல் ரூ.10.95 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்தது.


Click it and Unblock the Notifications








