பஸ்சுடன் மோதி சுக்குநூறான லம்போர்கினி கார்!

By Saravana

சீனாவில் ஓவர்டேக் செய்த லம்போர்கினி கார் எதிரே வந்த பஸ்சுடன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் காயமடைந்தனர்.

சீனாவின் ஹெபெய் நகரில் இந்த விபத்து நடந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த காரை அதிவேகத்தில் லம்போர்கினி காரை ஓட்டியவர் முந்த முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த பஸ்சுடன் அந்த லம்போர்கினி அவென்டேடார் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லம்போர்கினி காரை ஓட்டி வந்தவர், பஸ் டிரைவர் மற்றும் சில பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வேகம்

வேகம்

மணிக்கு 80 கிமீ வேகத்தில் பஸ்சுடன் மோதியுள்ளது அந்த லம்போர்கினி கார்.

பலத்த சேதம்

பலத்த சேதம்

மோதிய வேகத்தில் காரின் வலது பக்கம் முழுவதும் பலத்த சேதமடைந்தது. அதேவேளை, ஓட்டுனர் அமர்ந்திருந்த பக்கம் அதிக பாதிப்பு இல்லாததால் உயிர் தப்பினார்.

இன்ஸ்யூரன்ஸ் கிடைக்காதாம்

இன்ஸ்யூரன்ஸ் கிடைக்காதாம்

விபத்தில் சிக்கிய லம்போர்கினி காரில் பதிவெண் பலகை இல்லாமல் வந்துள்ளதால், காப்பீடு நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கிடைக்காது என அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிர் காத்த காற்றுப் பை

உயிர் காத்த காற்றுப் பை

ஓட்டுனர் பக்கம் அதிக பாதிப்பு இல்லையென்றாலும், உயிர் காக்கும் காற்றுப் பை விரிந்ததால், ஓட்டுனர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டது.

மாடல்

மாடல்

விபத்துக்குள்ளான லம்போர்கினி கார் 700 எச்பி பவர் கொண்ட எல்பி- 700 -4 அவென்டேடார் மாடல் என அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.

விசேஷ வண்ணம்

விசேஷ வண்ணம்

விபத்துக்குள்ளான அவென்டேடார் கார் "அரன்சியோ அர்கோஸ்" என்ற பிரத்யேக வண்ணத்தை கொண்டது. சூரிய ஒளி, விளக்கொளியில் சிவப்பு நிறத்திலும், வெளிச்சம் குறைந்த நேரத்தில் ஆரஞ்ச் நிறத்திலும் மாறும் சிறப்பு கொண்டது.

வேகமே காரணம்

வேகமே காரணம்

முதல் கட்ட விசாரணையில், அதிவேகத்தில் முந்த முயன்றதே விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 4, 2014, 10:24 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+