மாருதி ஆல்ட்டோ 800 காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்
மாருதி ஆல்ட்டோ 800 காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 மேக்ஸிமம் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடலில் பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆர்ட் லெதர் சீட் கவர்கள், சைடு மோல்டிங்குகள், கீ லெஸ் என்ட்ரி, ரியர் ரூஃப் ஸ்பாய்லர், பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் சைடு டீக்கெல்கள் கொடுக்கப்பட்டுள்ளனய மேலும், ரூ.66,666 சேமிப்புச் சலுகைகளும் பெறும் வாய்ப்பும் உள்ளது.
ஆல்ட்டோ 800 காரில் 796சிசி 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 47.5 பிஎச்பி பவரையும், 69 என்எம் டார்க்கையும் அளிக்கும்.
பெட்ரோல் மாடல் மட்டுமின்றி சிஎன்ஜி.,யில் இயங்கும் மாடலும் விற்பனைக்கு கிடைக்கிறது. சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 30.46 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








