மாருதியின் புதிய ஆல்ட்டோ கே10 காருக்கு முன்பதிவு துவக்கம்!
அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் புதிய மாருதி ஆல்ட்டோ கே10 காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. ரூ.10,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்படுவதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாருதி ஆல்ட்டோ 800 டிசைனில் சில மாற்றங்களுடன் வரும் புதிய ஆல்ட்டோ கே10 கார் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்(ஏஎம்டி.,) மாடலிலும் வருகிறது. இது குறைவான விலை ஆட்டோமேட்டிக் காராக குறிப்பிடப்படுவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தநிலையில், ஏற்கனவே ஆல்ட்டோ கே10 காரை முன்பதிவு செய்தவர்களும் புதிய ஆல்ட்டோ கே10 காரின் ஏஎம்டி மாடலுக்கு முன்பதிவை மாற்றிக் கொள்ளலாம் என்று டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செலிரியோவை அடுத்து இரண்டாவதாக ஆல்ட்டோ கே10 காரில் ஏஎம்டி மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய ஆல்ட்டோ கே10 காரில் 68பிஎஸ் பவரையும், 90என்எம் டார்க்கையும் வழங்கும் 1.0 லிட்டர் கே சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடல்களில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








