பட்ஜெட் கார் தயாரிப்பாளர் முத்திரையை போக்குவதற்கு துடிக்கும் மாருதி!

By Saravana

சென்னை, பெங்களூர் உள்பட நாட்டின் 16 முக்கிய நகரங்களில் பிராண்டு சென்டர்களை மாருதி கார் நிறுவனம் அமைக்கிறது.

பட்ஜெட் கார் தயாரிப்பாளர் என்ற முத்திரையை மாற்றி பிரிமியம் கார் தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை பெறுவதற்காக இந்த மையங்களை மாருதி அமைக்க உள்ளது.

Maruti Ciaz

இது பிற விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் போன்று செயல்படாது. பட்ஜெட் கார்களை தவிர்த்து, எம்பிவி, எஸ்யூவி போன்ற விலை அதிகமான மற்றும் பிரிமியம் அந்தஸ்து கொண்ட மாடல்களை இந்த மையங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.

மாருதியின் புதிய தொழில்நுட்பங்களும் இங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். முதல்கட்டமாக சென்னை, பெங்களூர், கொச்சி, ஜெய்ப்பூர், கோல்கட்டா, சண்டிகர், இந்தூர் ஆகிய நகரங்களில் இந்த பிராண்டு சென்டர்கள் அமைக்கப்பட உள்ளது.

டெல்லியின் வசந்த் கன்ச் பகுதியில் வெற்றிகரமான செயல்பட்டு வரும் மாருதி பிராண்டு சென்டரின் அடிப்படையிலேயே இந்த புதிய மையங்களை அமைக்க மாருதி முடிவு செய்துள்ளது. இந்த மையங்கள் நகரின் முக்கிய பகுதிகளில் ஷாப்பிங் மால்களின் அருகாமையில் அமைக்கவும் மாருதி திட்டமிட்டுள்ளது.

இதற்கான இடத்தை வாங்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மையங்களில் மாருதியின் புதிய எஸ்எக்ஸ்4 கிராஸ், சியாஸ் செடான் மற்றும் ஐவி4 எஸ்யூவி மாடல்கள் காட்சிக்கு வைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, March 10, 2014, 12:51 [IST]
English summary
Maruti Suzuki's bread and butter are small entry budget cars but even India's largest carmaker cannot ignore the maturing automotive scene in the country which now increasingly leans towards larger, more expensive vehicles such as SUVs and MPVs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+