டிசம்பரில் மாருதி கார் விற்பனையில் சிறிது சரிவு!
கடந்த மாதம் மாருதி கார் விற்பனையில் சிறிது சரிவு ஏற்பட்டது. கடந்த டிசம்பரில் 95,145 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 90,924 கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது.
இதனால், அந்த நிறுவனத்தின் விற்பனையில் 4.4 சதவீதம் சரிவு ஏற்பட்டது. உள்நாட்டு விற்பனையில் 5.5 சதவீதம் சரிவு காணப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் 86,613 கார்களை விற்றிருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 82,073 கார்களை மட்டுமே விற்பனை செய்தது.

அதேவேளை, மாருதி 800, ஆல்ட்டோ, ஏ ஸ்டார், வேகன் ஆர் உள்ளடக்கிய சிறிய கார் மார்க்கெட்டில் அந்த நிறுவனத்தின் விற்பனையில் 16.7 சதவீதம் உயர்ந்தது. ரிட்ஸ், ஸ்விஃப்ட் உள்ளடக்கிய ஹேட்ச்பேக் ரக விற்பனையில் 14.7 சதவீதம் பலவீனமடைந்தது.
டிசையர் காரின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் 13,076 டிசையர் கார்களை விற்பனை செய்திருந்த மாருதி கடந்த மாதம் 15,427 கார்களை விற்பனை செய்துள்ளது.
எர்டிகா, எஸ்எக்ஸ்4 போன்ற கார்களின் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. தவிர, கடந்த மாதம் ஏற்றுமதி 67 சதவீதம் சரிவு கண்டதாக மாருதி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








