மாருதி செலிரியோவுக்கு 30,000 புக்கிங்: காத்திருப்பு காலம் நீண்டது
மாருதி செலிரியோவுக்கு இதுவரை 30,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, சில வேரியண்ட்டுகளுக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை நீண்டுள்ளது.
மேலும், இந்திய ஆட்டோமேட்டிக் கார் வரலாற்றிலேயே, மாருதி செலிரியோவின் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் பெரும் எண்ணிக்கையிலான முன்பதிவையும் பதிவு செய்து வருகிறது.

அதாவது, மேனுவல் வேரியண்ட்டைவிட ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுக்கான முன்பதிவு அதிகம் இருந்து வருகிறது. இதன்படி, மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட வேரியண்ட்டுகளுக்கான காத்திருப்பு காலம் 3 மாதங்கள் வரையிலும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளுக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரையிலும் நீண்டுள்ளது.
மாருதி செலிரியோவின் இசட்எக்ஸ்ஐ டாப் வேரியண்ட்டில் ஏபிஎஸ், முன்புற ஏர்பேக்குகள், சென்ட்ரல் லாக்கிங், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் ரியர் வியூ கண்ணாடிகள் மற்றும் ரியர் வைப்பர் உள்பட ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஆனால், அதனை ரூ.5 லட்சத்தையொட்டிய விலையில் கிடைப்பதால் செலிரியோவுக்கான வரவேற்பு மாருதிக்கு பெரிய பங்களிப்பை வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








