புதிய 800சிசி டீசல் எஞ்சினுடன் மாருதி செலிரியோ 'கன்ஃபர்ம்டு'!!
புதிய 800சிசி டீசல் எஞ்சின் கொண்ட மாருதி செலிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இந்த புதிய மாடல் மாருதியின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய 800சிசி டீசல் எஞ்சின் செலிரியோ மட்டுமின்றி பல்வேறு மாடல்களில் வருவதும் உறுதியாகியுள்ளது. ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பேட்டயளித்த மாருதி உயரதிகாரி ஒருவர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சிறிய டீசல் எஞ்சின்
சுஸுகி நிறுவனம் முதல்முறையாக புதிய 800சிசி டீசல் எஞ்சினை உருவாக்கி வருகிறது. இதுதான் அந்த நிறுவனத்தின் மிகச்சிறிய முதல் டீசல் எஞ்சினாகும்.இந்த புதிய எஞ்சின் பல மாருதி கார்களில் இடம்பெற உள்ளது. இது லிட்டருக்கு 30கிமீ வரை மைலேஜ் தரும் என்ற வதந்திகள் ஆட்டோமொபைல் வட்டாரத்தில் பரவியுள்ளன.

முதல் மாடல்
மாருதி பிராண்டில் புதிய மினி டிரக் வெளியிடப்பட உள்ளது. இந்த புதிய மினி டிரக் ஒய்9டி என்ற குறியீட்டுப் பெயரில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய மினி டிரக்கில்தான் முதலில் சுஸுகியின் 800சிசி டீசல் எஞ்சின் பொருத்தி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த புதிய மினி டிரக் விற்பனைக்கு வர இருக்கிறது.

இரண்டாவது செலிரியோ
அடுத்த ஆண்டு ஜனவரியில் மாருதியின் புதிய மினி டிரக் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செலிரியோவின் டீசல் மாடலை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது.

3வது மாடல்
செலிரியோவைத் தொடர்ந்து ஈக்கோ பயணிகள் வேனில் புதிய 800சிசி டீசல் எஞ்சினை பொருத்தி அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் ஈக்கோ விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், டீசல் மாடலிலும் ஈக்கோ விற்பனைக்கு வந்துவிட்டால், தனிநபர் மார்க்கெட் மட்டுமின்றி, அது டாக்சி உரிமையாளர்களிடத்தில் வரவேற்பை பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

அடுத்து ஓம்னி
மாருதி ஈக்கோவை தொடர்ந்து ஓம்னி வேனிலும் புதிய 800சிசி டீசல் எஞ்சினை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், ஈக்கோ, ஓம்னி வேன்களின் விற்பனை கணிசமாக உயரும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் ஆருடங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








