மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்களின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

By Saravana

பண்டிகை காலத்தையொட்டி, மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் சில்வர் ப்ளஸ் மற்றும் டிசையர் ரீகாலியா என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடல்களில் கூடுதல் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் கொண்ட இந்த மாடல்களை வாங்குபவர்களுக்கு குறிப்பிட்ட சேமிப்பை பெற முடியும். இந்த கார்களில் இருக்கும் சிறப்பம்சங்களை தனித்தனியாக கீழே காணலாம்.

Maruti Special Edition

டிசையர் ரீகாலியா

வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது. வெளிப்புறத்தில் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரீகாலியா பேட்ஜ் மற்றும் டீகெல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. லெதர் அப்ஹோல்ஸ்டரி, டிசைனர் தரை விரிப்புகள், ஃபாக்ஸ் வுட் மரவேலைப்பாடுகள் என இன்டிரியர் கவர்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆக்சஸெரீஸ் பேக்கிற்கு ரூ.18,810 விலை அடக்கமாகிறது. ஆனால், மாருதி நிறுவனம் அந்த தொகையில் ரூ.5,010 வரை கழிவு கொடுக்கிறது. இதனால், ரூ.13,800 கூடுதலாக செலுத்தி இந்த சிறப்பு ஆக்சஸெரீஸ்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஸ்விஃப்ட் சில்வர் ப்ளஸ்

ஸ்விஃப்ட் சில்வர் ப்ளஸ் மாடலில் புதிய ஸ்போர்ட்ஸ் நெக் பில்லோ, பிரிமியம் ஃபேப்ரிக் இருக்கைகள், ஸ்டீயரிங் கவர், சோனி மியூசிக் சிஸ்டம், மொபைல் ஹோல்டர் மற்றும் சார்ஜருடன் கிடைக்கிறது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஆக்சஸெரீஸ்களின் மதிப்பு ரூ.31,745 என்று தெரிவிக்கப்படுகிறது. அதில், ரூ.4,245 வரை மாருதி தள்ளுபடி தருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 22, 2014, 9:36 [IST]
English summary
Maruti Suzuki has introduced limited edition variants Swift and Dzire, badged Swift Silver Plus and DZire Regalia respectively.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+