புதிய ஆட்டோமேட்டிக் கார் மாடல்களை களமிறக்குவதாக மாருதி தகவல்!
திய ஆட்டோமேட்டிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதி செலிரியோவில் அறிமுகம் செய்யப்பட்ட ஏஎம்டி கியர்பாக்ஸ் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் ஆல்ட்டோ கே10 காரிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

குறைவான விலை, அதிக மைலேஜ் போன்ற காரணங்களால் ஏஎம்டி எனப்படும் இந்த ஆட்டோமேட்டிக் மாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, மேலும் பல கார்களில் இந்த புதிய ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.
மாருதியின் எஞ்சினியரிங் பிரிவு அதிகாரி சிவி.ராமன் இந்த தகவலை கூறினார். மேலும், புதிய ஆட்டோமேட்டிக் மாடல்களை தயாரிப்பதற்கு ஏதுவாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகளையும், சோதனை மையங்களையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிய தயாரிப்புகளை உருவாக்கவும், சந்தைப்படுத்துதல் கட்டமைப்பை வலுவாக்கவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.4,000 கோடியை முதலீடு செய்ய இருப்பதாகவும் ராமன் தெரிவித்துள்ளார்.
தற்போது மாதத்திற்கு சராசரியாக 4,000 ஏஎம்டி கார்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், வரும் காலங்களில் இந்த எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








