ரூ.4,000 கோடியுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க களமிறங்கும் மாருதி!
அடுத்த நிதி ஆண்டில் ரூ.4,000 கோடியை முதலீடு செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முதலீட்டுக்கு மாருதி நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய கார் மாடல்கள் அறிமுகத்திற்கும், சந்தைப்படுத்துதலுக்கும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும். இதுதவிர, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கும் அதிக அளவில் முதலீடு செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், செலிரியோ காரைத் தொடர்ந்து, சியாஸ் செடான் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. மேலும், எஸ் கிராஸ் எஸ்யூவியையும் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது மட்டுமின்றி, சந்தை போட்டியை எதிர்கொள்ளும் விதத்தில் பல புதிய மாடல்கள் வடிவமைப்புக்கும், புதிய தொழில்நுட்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க மாருதி தீர்மானித்துள்ளது.


Click it and Unblock the Notifications








