நவ.4ல் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி ஆல்ட்டோ கே10!
வரும் 4ந் தேதி பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய மாருதி ஆல்ட்டோ கே10 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
மாருதி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு உயர் அதிகாரி ஆர்.எஸ்.கல்சி இந்த புதிய மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறார்.

தற்போது விற்பனையில் இருக்கும் மாருதி ஆல்ட்டோ 800 காரின் டிசைனில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு புதிய ஆல்ட்டோ கே10 கார் வருகிறது.
1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, தானியங்கி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சிறப்பான மைலேஜ் கொண்ட, விலை குறைவான ஆட்டோமேட்டிக் கார் மாடலாக இது வருவதால் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
வரும் 4ந் தேதி புதிய ஆல்ட்டோ கே10 காரின் அறிமுக நிகழ்ச்சியிலிருந்து அதிகாரப்பூர்வ விலை மற்றும் இதர விபரங்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் படிக்கலாம்.


Click it and Unblock the Notifications








