புதிய சுஸுகி விட்டாரா இந்தியாவுக்கு எப்போது? கொட்டாவி வரவழைக்கும் செய்தி!
பாரீஸ் மோட்டார் ஷோவில் மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்தது. ஐரோப்பிய மார்க்கெட்டில் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் பின்னர் உலக அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.
இந்த எஸ்யூவியை மாருதி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால், இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை. இந்த நிலையில், புதிய சுஸுகி விட்டாரா இந்தியாவில் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

காம்பேக்ட் எஸ்யூவி
இந்த புதிய எஸ்யூவி 4,175மிமீ நீளமும், 1,775 மிமீ அகலமும், 1,610மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2,500மிமீ என்பதால் கேபினில் நல்ல இடவசதியை எதிர்பார்க்கலாம். இதன் குறைந்தபட்ச கிரவுண்ட் கிளிரயன்ஸ் 185மிமீ.

டஸ்ட்டருக்கு போட்டி
இந்த புதிய சுஸுகி விட்டாரா காம்பேக்ட் எஸ்யூவி டஸ்ட்டருக்கு போட்டியாக நிலைநிறுத்தப்பட உள்ளது. எனவே, மாருதி ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிமுகம் எப்போது?
மீடியா தகவல்களின்படி, இந்த புதிய சுஸுகி விட்டாரா காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், அது 2018ம் ஆண்டில்தான் இந்தியா வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபேஸ்லிஃப்ட் மாடல்தான்...
ஒருவேளை 2018ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்போது, இந்த புதிய எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடல்தான் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது.

புதிய மினி எஸ்யூவி
இந்த புதிய சுஸுகி விட்டாரா காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்வதற்கு முன்னர் புதிய மினி எஸ்யூவியை மாருதி அறிமுகம் செய்துவிடும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஒய்.ஏ.டி என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் புதிய மினி எஸ்யூவி முன்னதாக விற்பனைக்கு கொண்டு வந்துவிடும் பணிகளில் மாருதி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் கான்செப்ட் மாடலாக இந்த புதிய மினி எஸ்யூவியை முதல்முறையாக மாருதி காட்சிக்கு வைத்திருந்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








