கிளட்ச் இல்லாமல் இயங்கும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்: மாருதி அறிமுகப்படுத்துகிறது
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கிளட்ச் இல்லாத மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட காரை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு 'செமி' ஆட்டோமேட்டிக் என்று சொல்லப்படும் தொழில்நுட்பத்தை கொண்டதாக இருக்கும்.
இது கார் மார்க்கெட்டிற்கான புரட்சிகர தொழில்நுட்பமாக எதிர்பார்க்கப்படுவதாக 'எக்கானமிக் டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டிரான்ஸ்மிஷன் எந்த காரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது உள்ளிட்ட கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஃபார்முலா- 1 நுட்பம்
ஃபார்முலா- 1 கார்களில் இதுபோன்ற டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதே தொழில்நுட்பத்தை முதல்முறையாக சாதாரண ரக கார்களிலும் மாருதி கொண்டு வருவதே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஓட்டுதல் அனுபவம்
இந்த புதிய கியர் பாக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட கார் முற்றிலும் புதிய ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும்.

புதிய ஏ- ஸ்டார்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் செலிரியோ என்ற பெயரில் மாருதி அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஏ- ஸ்டார் காரில் இந்த புதிய கிளட்ச் இல்லாத மேனுவல் கியர் பாக்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, தாய்லாந்து மார்க்கெட்டில் இந்த காரின் கான்செப்ட்டில் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டது.

விசேஷம் என்ன?
விலை மற்றும் எரிபொருள் சிக்கனத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இந்த புதிய கிளட்ச் இல்லாத காரை அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது என்பதும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

சிட்டிக்கு சூப்பர்
கிளட்ச் இல்லாத மேனுவலாக கியர் மாற்றும் வசதி கொண்டதாக இருக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு இந்த புதிய கார் வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி நம்பர்- 1
நாட்டின் நம்பர்-1 கார் தயாரிப்பாளராக திகழும் மாருதி மீது வாடிக்கையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். குறிப்பாக, சிறிய கார் மார்க்கெட்டில் மாருதியின் தொழில்நுட்பம் சிறப்பானதாக பெயர்பெற்றது. இந்த நிலையில், சரியான விலையில் இந்த புதிய காரை அறிமுகம் செய்தால் அது நிச்சயம் மிகப்பெரிய ஆதரவை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும். மார்க்கெட் பங்களிப்பையும் மாருதி தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள ஏதுவாகும்.


Click it and Unblock the Notifications








