ஏ ஸ்டாருக்கு மாற்றாக வரும் புதிய காருக்கு செலிரியோ என பெயரிட்ட சுஸுகி

By Saravana

மாருதி நிறுவனத்திடமிருந்து அடுத்து வர இருக்கும் புதிய ஹேட்ச்பேக் காராக கருதப்படும் புதிய ஏ- ஸ்டார் பற்றி ஆட்டோமொபைல் துறையினரால் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. நீண்ட காலத்துக்கு பின்னர் மாருதியிடமிருந்து வர இருக்கும் புத்தம் புதிய ஹேட்ச்பேக் கார் மாடல் என்பதால் வாடிக்கையாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் தாய்லாந்து மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஏ- விண்ட் கான்செப்ட் மாடலை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த புதிய கார். இந்த கான்செப்ட் அடிப்படையில் உருவான தயாரிப்பு நிலை மாடல் அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஒரு உலகளாவிய சந்தைப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட கார் மாடல். எனவே, இந்தியா மட்டுமின்றி பல்வேறு மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

புதிய கார்

புதிய கார்

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஏ ஸ்டார் வெளிநாட்டு சந்தைகளில் ஆல்ட்டோ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த காருக்கு மாற்றாக வரும் புதிய ஏ ஸ்டார் காருக்கு செலிரியோ என சுஸுகி பெயரிட்டுள்ளது.

 சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

ஒய்எல்-7 என்ற பெயரில் இந்த கார் இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏ விண்ட் கான்செப்ட் காரின் தயாரிப்பு நிலை மாடலாக வரும் செலிரியோ ஒரு உலகளாவிய கார் மாடல். இந்த புதிய மாடலை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து சர்வதேச அளவில் அறிமுகம் செய்வதற்கு மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி முடிவு செய்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

தாய்லாந்து ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட ஏ விண்ட் கான்செப்ட்டில் 996சிசி பெட்ரோல் எஞ்சினுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் ஆல்ட்டோ கே10 காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக இந்த காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது.

புதிய எஞ்சின்கள்

புதிய எஞ்சின்கள்

உடனடியாக இல்லாவிட்டாலும், அடுத்து வரும் ஆண்டுகளில் சுஸுகி தயாரித்து வரும் புதிய டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் புதிய டீசல் எஞ்சின் ஆகியவற்றை இந்த காரில் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வரும் திட்டமும் சுஸுகி வசம் உள்ளது.

 மாற்றங்கள்

மாற்றங்கள்

ஸ்லைடரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஏ விண்ட் கான்செப்ட் படங்களில் இருக்கும் காருக்கும், தயாரிப்பு நிலை மாடலாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாடலுக்கு சில மாற்றங்கள் இருக்கும். முன்பக்க கிரில், ஹெட்லைட் உள்ளிட்டவற்றில் சிறிய மாறுதல்களுடன் வரும்.

இடவசதி

இடவசதி

இதுவரை விற்பனையில் இருந்து வந்த ஏ ஸ்டார் காரைவிட மாற்றாக வரும் புதிய செலிரியோ கார் கூடுதல் இடவசதி கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்களிடம் நிச்சயம் ஆதரவை பெறும் என்று சுஸுகி நம்புகிறது.

ஏற்றுமதி மாடல்

ஏற்றுமதி மாடல்

ஏ- ஸ்டார் போன்றே இந்த புதிய கார் மாடலும் இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். புதிய செலிரியோ குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தெரிந்துவிடும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 3, 2014, 10:05 [IST]
English summary
The much talked about upcoming compact car from Suzuki, known until now by its codename YL7 and previewed by the A-Wind Concept at the Thailand International Motor Show in November 2013, now has a name. Celerio.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+