மொபிலியோ வருகையால் எர்டிகாவுக்கு வாரி வழங்கும் மாருதி!
ஹோண்டா மொபிலியோ கார் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், மாருதி எர்டிகாவுக்கு ரூ.70,000 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தற்போது எம்பிவி மார்க்கெட்டில் மிகவும் வெற்றிகரமான மாடலாக மாருதி எர்டிகா வலம் வருகிறது. மாதத்திற்கு சராசரியாக 5,000 எர்டிகா கார்கள் விற்பனையாகின்றன.

மேலும், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் இதுவரை 1.50 லட்சம் எர்டிகா கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில், ஹோண்டாவிடமிருந்து வரும் புதிய மொபிலியோ எம்பிவி கார் மாருதி எர்டிகாவுக்கு நேருக்கு நேர் மோத இருக்கிறது.
சிறந்த இடவசதி, அதிக மைலேஜ் என்ற கவர்ச்சியான காரணங்களை முன்வைத்து எர்டிகா மார்க்கெட்டை உடைத்து மொபிலியோவுக்கு தனி ராஜ்யத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை ஹோண்டா துவங்கிவிட்டது.
இதனால், எர்டிகா விற்பனையை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மாருதி மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்பெஷல் எடிசன் எர்டிகாவை மாருதி விற்பனைக்கு கொண்டு வந்தது.
இந்த நிலையில், எர்டிகாவுக்கு சிறப்பு சேமிப்பு சலுகைகளை மாருதி வழங்குகிறது. விலையில் நேரடி தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவற்றை சேர்த்து ரூ.70,000 வரை தள்ளுபடியை பெறும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளது.


Click it and Unblock the Notifications








