மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!
மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. ரூ.10,000 முன்பணம் பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்யப்படுகிறது.
புதுப்பொலிவுடன் கூடிய மாருதி ஸ்விஃப்ட் கார் இந்த மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அம்சங்களுடன் புதிய மாடல் வருகிறது.

இந்த புதிய மாடல் ஸ்விஃப்ட் ரசிகர்களிடையே பெரும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. இந்தநிலையில், இந்த புதிய மாடலுக்கான முன்பதிவு மாருதி டீலர்களில் துவங்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான டீலர்களில் பழைய ஸ்விஃப்ட் காரின் இருப்பு தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, புதிய மாடலின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மாதம் துவக்கத்திலிருந்து டெலிவிரி துவங்கப்படும் என்று மாருதி டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








