ஆல்ட்டோ கே10 காரிலும் கிளட்ச்லெஸ் கியர் பாக்ஸ்! - மாருதி திட்டம்
ஆல்ட்டோ கே10 காரிலும் கிளட்ச்லெஸ் கியர் பாக்ஸ் கொண்ட மாடலை அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. செலிரியோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வகை ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றிருக்கிறது.
மாருதியின் கணிப்பையும், இலக்கையும் பொய்யாக்கும் வகையில், அந்த காருக்கு முன்பதிவு கிடைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து, விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய எஸ்எக்ஸ்4 செடான் காரிலும் இதே வகை டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யபப்பட உள்ளது. இந்த நிலையில், ஆல்ட்டோ கே10 காரிலும் இந்த புதிய ஏஎம்டி டிரான்ஸ்மிஷனை பொருத்தி அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூடுதல் விலை
தற்போது விற்பனையில் இருக்கும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலைவிட ரூ.40,000 கூடுதல் விலை கொண்டதாக இருக்கும்.

குறைந்த விலை மாடல்
விற்பனைக்கு வரும் பட்சத்தில், மார்க்கெட்டின் மிகக் குறைந்த விலை செமி ஆட்டோமேட்டிக் மாடலாக ஆல்ட்டோ கே10 நிலைநிறுத்தப்படும்.

விற்பனை
ஆல்ட்டோ கே10 காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு வந்தால், அந்த காரின் விற்பனை கணிசமாக உயரும் வாய்ப்பு இருப்பதோடு, மாருதியின் மார்க்கெட் பங்களிப்பு மேலும் உயரும்.

அறிமுகம் எப்போது?
இந்த ஆண்டு இறுதியில் ஆல்ட்டோ கே10 காரின் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நானோ வந்தாலும்...
டாடா நானோ காரிலும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. அப்படி வந்தாலும், ஆல்ட்டோ கே10 காரின் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று மாருதி கருதுகிறது.


Click it and Unblock the Notifications








