ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வரும் மாருதி டிசையர், எர்டிகா டீசல் மாடல்கள்!

By Saravana

அடுத்த ஆண்டு ஏஎம்டி கியர்பாக்ஸுடன் டிசையர் மற்றும் எர்டிகா கார்களின் டீசல் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது.

ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் எனப்படும் புதிய வகை கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. மாருதி செலிரியோ மற்றும் ஆல்ட்டோ கே10 கார்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு இதற்கு சான்று. மேலும், மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விரைவில் வர இருக்கிறது. இவை அனைத்தும் பெட்ரோல் மாடல்கள்.

Maruti Ertiga

இந்த நிலையில், டிசையர் மற்றும் எர்டிகா கார்களின் டீசல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. இந்த இரு மாடல்களிலும் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த எஞ்சினுக்கு ஏற்ற ஏஎம்டி கியர்பாக்ஸ் தற்போது ஃபியட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் மேக்னட்டி மரெல்லி நிறுவனத்திடம் உள்ளது. அதாவது, டாடா ஸெஸ்ட் காரில் இதே ஃபியட் 1.3 லிட்டர் எஞ்சினுக்கு ஏற்ற ஏஎம்டி கியர்பாக்ஸை மேக்னெட்டி மரெல்லி நிறுவனம் ஏற்கனவே சப்ளை செய்து வருகிறது.

எனவே, டிசையர், எர்டிகா கார்களின் டீசல் மாடலில் எளிதாக ஏஎம்டி கியர்பாக்ஸை சப்ளை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அடுத்த ஆண்டு இந்த இரண்டு புதிய ஏஎம்டி டீசல் மாடல்கள் மாருதியிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

இவை தவிர்த்து, செலிரியோ டீசல் மாடலும், டிசையர், எர்டிகா மற்றும் ஈக்கோ கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் அடுத்த ஆண்டு மாருதியிடமிருந்து எதிர்பார்க்கப்படும் மாடல்களாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, December 27, 2014, 11:51 [IST]
English summary
Maruti Suzuki offers the AMT unit only on its petrol powered cars. However, the technology is also suitable for addition on diesel powered cars, especially the 1.3 liter Fiat Multijet turbo diesel mill, which is a staple across multiple best selling Maruti Suzuki cars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+