மாருதி ரிட்ஸ் லிமிடேட் எடிசன் மாடலின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!
பெர்ஃபார்மென்ஸில் புகழ்பெற்ற மாருதி ரிட்ஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் சிறப்பான வசதிகளையும், தோற்றக் கவர்ச்சியையும் வழங்குவதற்காக 12 கூடுதல் ஆக்செஸரீஸ்களை மாருதி வழங்கியுள்ளது.
ரிட்ஸ் எலேட் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் என்று கூறலாம். இந்த காரில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் மற்றும் விபரங்களை ஸ்லைடரில் வரிசையாக காணலாம்.
ஸ்லைடரில் தொடர்ச்சியை ஸ்லைடரில் காணலாம்.

பாடி கிராஃபிக்ஸ்
வெளிப்புறத்தை மிக கவர்ச்சியாக காட்டும் வகையில் பாடி கிராஃபிக்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதை காணலாம்.

இன்டிரியர்
மிக ரம்மியமான உணர்வை தரும் வகையில் புதிய இன்டிரியர் பினிஷிங்கையும், முன் இருக்கையில் கால் வைக்கும் இடத்தில் ஆம்பியன்ட் விளக்கு கொடுக்கப்பட்டிருப்பதையும் காணலாம். புதிய ஸ்டீயரிங் வீல் கவர் கைகளுக்கு மிருதுவான உணர்வை தரும்.

மியூசிக் சிஸ்டம்
யுஎஸ்பி போர்ட், சிடி பிளேயர், ஆக்ஸ் போர்ட் வசதிகள் கொண்ட 2 டின் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது.

சீட் கவர்கள்
ஆரஞ்ச் மற்றும் சாம்பல் வண்ணத்தில் பிரத்யேக டிசைன் கொண்ட சீட் கவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கழுத்துக்கான நெக் குஷனும் கூடுதல் ஆக்சஸெரீயாக இருக்கும்.

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்
டிஜிட்டல் திரை வசதியுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

புளூடூத் கிட்
பிளாபுங்கட் பிராண்டு புளூடூத் கிட் கொடுக்கப்பட்டுள்ளது.

வைசர்கள்
ஜன்னல் கதவுகளின் மேல் கொடுக்கப்பட்டிருக்கும் வைசர்கள்.

மிதியடிகள்
லிமிடேட் எடிசன் ரிட்ஸ் காருக்கு வழங்கப்படும் பிரத்யேக மிதியடிகள்.

கூடுதல் வசதி
சாவி, பர்ஸ் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான சிறிய பை ஒன்று முன் இருக்கையின் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலை
சாதாரண மாடலைவிட இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல் ரூ.20,000 கூடுதலான விலையில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








