புதிய மாருதி எஸ் கிராஸ் காரில் பீஜோ டீசல் எஞ்சின்: ஃபியட் எஞ்சின் இல்லை

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எஸ்- கிராஸ் என்ற புதிய எஸ்யூவி மாடலை மாருதி காட்சிக்கு வைத்திருந்தது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்திய மார்க்கெட்டில் இந்த புதிய எஸ்யூவியை மாருதி விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய எஸ்யூவிக்கு ஃபியட் நிறுவனத்தின் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினை மாருதி பொருத்த இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால், தற்போது திடீர் திருப்பமாக பிரெஞ்ச் நிறுவனமான பீஜோவிடமிருந்து டீசல் எஞ்சினை பெற்று இந்த புதிய எஸ்யூவியில் பொருத்தி மாருதி சோதனைகளை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கூட்டு தயாரிப்பு எஞ்சின்

கூட்டு தயாரிப்பு எஞ்சின்

பீஜோ மற்றும் ஃபோர்டு நிறுவனத்தின் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் இது. இது 90 எச்பி மற்றும் 110 எச்பி பவர் கொண்ட மாடல்களில் டியூனிங் செய்யப்பட்டிருக்கிறது.

மினி கூப்பர் எஞ்சின்

மினி கூப்பர் எஞ்சின்

மினி கூப்பர் பிரிமியம் காரில் இதே எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கிறது. கூடுதலாக டர்போசார்ஜர்களுடன் அதிக சக்தி கொண்டதாக பயன்படுத்தப்படுகிறது.

எஸ் கிராஸ் எஞ்சின்

எஸ் கிராஸ் எஞ்சின்

மாருதியின் எஸ் கிராஸ் கார் 4.3 மீட்டர் நீளம் கொண்டது. எனவே, இதனை காம்பெக்ட் கார் வரையறைக்குள் வராது. எனவே, மாருதி நிறுவனம் 110 எச்பி பவர் கொண்டதாக இந்த காரை வெளியிடும் என்று தெரிகிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

மாருதி எஸ் கிராஸ் கிராஸ்ஓவர் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால், ரெனோ டஸ்ட்டர், நிசான் டெரானோ மாடல்களுக்கு நேரடி போட்டியாக அமையும். மாருதியின் அசாத்தியமான சர்வீஸ் நெட்வொர்க்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மார்க்கெட்டையும் சிறிது உடைக்கும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 6, 2014, 12:01 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+