பெங்களூரில் மாருதி ஆல்ட்டோ கே10 காரின் விலை விபரம்!
புதிய மாருதி ஆல்ட்டோ கே10 கார் பெங்களூரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் தவிர்த்து, ஏஎம்டி என்ற புதிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடலிலும் விற்பனைக்கு கிடைக்கும்.
5 வித வேரியண்ட்டுகளில் பெங்களூரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த கார் இந்தியாவின் குறைவான விலை ஆட்டோமேட்டிக் கார் மாடலாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய காரின் பெங்களூர் விலை விபரம் மற்றும் இடம்பெற்றிருக்கும் வசதிகள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை
எல்எக்ஸ்: ரூ.3,23,471
எல்எக்ஸ்ஐ: ரூ.3,39,437
விஎக்ஸ்ஐ: ரூ.3,55,786
விஎக்ஸ்ஐ(ஓ): ரூ.3,75,060
விஎக்ஸ்ஐ(ஆட்டோமேட்டிக்: ரூ.3,98,977

எஞ்சின்
மாருதி ஆல்ட்டோ கே10 காரில் 998சிசி கே10பி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 67 பிஎச்பி பவரையும், 90என்எம் டார்க்கையும் அளிக்கும். இந்த கார் பெட்ரோல் மாடல் மட்டுமின்றி, குறிப்பிட்ட நகரங்களில் சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கும்.

கியர்பாக்ஸ்
5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ்(ஆட்டோமேட்டிக்) கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

முக்கிய வசதிகள்
- பம்பர், ரியர் வியூ கண்ணாடிகள், கதவு கைப்பிடிகள் காரின் பாடி கலரில் கொடுக்கப்பட்டுள்ளன.
- குரோம் பூச்சுடன் கூடிய முன்பக்க கிரில்
- கருப்பு நிற பி பில்லர்
- ஃபுல் வீல் கவர்கள்
- ஹீட்டர் வசதியுடன் கூடிய ஏசி
- பவர் ஸ்டீயரிங், கீலெஸ் என்ட்ரி, சென்ட்ரல் டோர் லாக்
- 2 ஸ்பீக்கர்கள் மற்றும் புளூடூத் வசதி கொண்ட ஆடியோ சிஸ்டம்
- 13இஞ்ச் வீல்கள்
- டிரைவருக்கான ஏர்பேக்
- பனி விளக்குகள்
- முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குகள்
- எஞ்சின் இம்மொபைலசர்
- மூன்று முனை இஎல்ஆர் சீட் பெல்ட்டுகள்

பாதுகாப்பு அம்சங்கள்

முழு தகவல்கள்
புதிய மாருதி ஆல்ட்டோ கே10 காரின் முழு விபரங்களையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








