அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது மாருதியின் மினி டிரக்!
அடுத்த ஆண்டு வர்த்தக வாகன மார்க்கெட்டிலும் மாருதி கால் பதிக்க இருக்கிறது. சுஸுகி நிறுவனத்தின் கேரி மினி டிரக்கின் அடிப்படையிலான புதிய மினி டிரக்கை மாருதி அறிமுகப்படுத்த உள்ளது.
ஒய்9டி என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய மினி டிரக் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய மினி டிரக்கில் 800சிசி திறன் கொண்ட புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது. இந்த புதிய டீசல் எஞ்சினை மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி தயாரித்து வருகிறது.

முதலாவதாக மாருதியின் மினி டிரக்கில் பொருத்தப்பட இருக்கும் இந்த புதிய 800சிசி டீசல் எஞ்சின் எதிர்காலத்தில் மாருதி கார்களிலும் பொருத்தப்படும். இந்த மினி டிரக்கில் சிஎன்ஜியில் இயங்கும் மாடலும் அறிமுகம் செய்யப்படும்.
ரூ.4 லட்சத்தில் டீசல் மாடலும், ரூ.4.5 லட்சத்தில் சிஎன்ஜி மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஏஸ் உள்ளிட்ட மினி டிரக்குகளுக்கு இது போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








