மாருதி செலிரியோவுக்கு வெயிட்டிங் பீரியட் எவ்ளோ தெரியுமா?
மாருதி செலிரியோவின் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு 4 முதல் 6 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 6ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி செலிரியோ கார் மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த காரில் முதன்முறையாக ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) என்ற புதிய வகை கியர் பாக்ஸ் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை டிரான்ஸ்மிஷன் கொண்ட செலிரியோ காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விற்பனைக்கு வந்து ஒரு மாத காலம் ஆகியிருக்கும் நிலையில், 22,000 செலிரியோ கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதில், பாதிக்கும் மேற்பட்டவை ஏஎம்டி கியர் பாக்ஸ் கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. செலிரியோ காரின் மூலம் மாருதி நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








