கிராஷ் டெஸ்ட்டில் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற மாருதி செலிரியோ!
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாருதி செலிரியோ கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், காரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் வகையில், லத்தீன் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் மாருதி செலிரியோ கார் 4 நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

ஏர்பேக் மாடல்
முன்புறத்தில் டியூவல் ஏர்பேக் கொண்ட செலிரியோ கார் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மதிப்பீடு
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் அதிகபட்சம் 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட இந்த சோதனையில் மாருதி செலிரியோ 4 நட்சத்திர அந்தஸ்தை செலிரியோ பெற்றது.

இதுல 2 ஸ்டார் ரேட்டிங்
பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கும் செலிரியோ குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களில் 2 நட்சத்திர அந்தஸ்தை மட்டுமே பெற்றுள்ளது.

செக்மென்ட்
இந்த புதிய கார் மாருதியின் ஆல்ட்டோ கே10 மற்றும் ரிட்ஸ் காருக்கு இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

எஞ்சின்
3 சிலிண்டர் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இது 67 பிஎஸ் பவரை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

கியர் பாக்ஸ்
புதிய செமி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட உள்ளது.

மைலேஜ்
லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் தரும் என மாருதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








