புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி செலிரியோ: முன்பதிவு 35,000ஐ கடந்தது!
மாருதி செலிரியோ காருக்கான முன்பதிவு எண்ணிக்கை 35,000 தாண்டியிருக்கிறது. இரண்டு மாதங்களில் இந்த இமாலய முன்பதிவு எண்ணிக்கையை பெற்றிருக்கிறது செலிரியோ கார்.
இந்த காரில் அறிமுகம் செய்யப்பட்ட ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்(AMT) என்ற புதிய வகை கியர்பாக்ஸ் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

மொத்த முன்பதிவில் 49 சதவீதம் இந்த புதிய வகை கியர்பாக்ஸ் கொண்ட செலிரியோ மாடலுக்கு கிடைத்துள்ளது. அதாவது, முன்பதிவு செய்யப்பட்ட மொத்த கார்களில் 17,000 கார்கள் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டவை.
ஏஎம்டி கியர் பாக்ஸ் தவிர்த்து செலிரியோவின் மைலேஜும் வாடிக்கையாளர்களை கவர முக்கிய காரணம். லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜை தரும் என்று மாருதி தெரிவிக்கிறது.
முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்ததை போன்றே, காத்திருப்பு காலமும் வெகுவாக உயர்ந்துள்ளது. தற்போது செலிரியோ காருக்கு 2 மாதங்கள் முதல் 4 மாதங்கள் வரை காத்திகருப்பு காலம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








