புதிய மாருதி சியாஸ் காருக்கு 10,000 பேர் முன்பதிவு!

By Saravana

நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய மாருதி சியாஸ் செடான் காருக்கு இதுவரை 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

கடந்த மாதம் 3ந் தேதி முதல் சியாஸ் காருக்கு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. முன்பதிவு துவங்கப்பட்ட சில நாட்களிலேயே 3,000 பேர் முன்பதிவு செய்தனர்.

Maruti Ciaz

இந்த நிலையில், விலை விபரம் தெரியாமலேயே கணிசமான முன்பதிவை சியாஸ் பெற்றது. இந்த நிலையில், ரூ.6.99 லட்சம் என்ற கடும் சவால் தரும் விலையில் வந்திருப்பதால் முன்பதிவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையும் முன்பதிவுக்கு பக்கபலமாக இருக்கும். மாருதி எர்டிகா காரின் எஞ்சின்களை சியாஸ் பங்கிட்டுக் கொண்டுள்ளது. பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் கே சீரிஸ் எஞ்சினும், டீசல் மாடலில் 1.3லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

30 வயது முதல் 40 வயது வரையிலான வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த புதிய காரை விற்பனை செய்ய இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது. சராசரியாக மாதத்திற்கு 5,000 முதல் 6,500 சியாஸ் கார்களை விற்பனை செயய் மாருதி இலக்கு வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 7, 2014, 8:58 [IST]
English summary
Maruti Suzuki, India’s largest carmaker, has so far received over 10,000 bookings for the Ciaz which went on sale today.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+