மாருதியின் 'பட்ஜெட்' இமேஜை மாற்ற வரும் சியாஸ்... பெரும் எதிர்பார்ப்பு

By Saravana

பட்ஜெட் விலையில் சிறந்த கார்களை வழங்குவதில் மாருதி தன்னிகரற்று விளங்குகிறது. இதனால், மார்க்கெட்டில் பட்ஜெட் கார் தயாரிப்பாளர் என்ற இமேஜ் மாருதிக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில், மாருதியின் பட்ஜெட் கார் தயாரிப்பாளர் இமேஜை மாற்றும் சக்தி சியாஸ் கார் மாற்றும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

மிட்சைஸ் செக்மென்ட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த மாருதி எஸ்எக்ஸ்4 காருக்கு மாற்றாக புதிய சியாஸ் செடான் கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி வாடிக்கையாளர்களுக்கு விருந்து படைக்க வரும் சியாஸ் தோற்றத்தில் மட்டுமல்ல, வசதிகளிலும், பாதுகாப்பிலும் பல படிகள் முன்னேறிய மாடலாக இருக்கும்.

Maruti Ciaz

போட்டியாளர்களாக கருதப்படும் புதிய ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு எந்தவிததத்திலும் குறைவில்லாமல் இந்த காரை வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்க மாருதி திட்டமிட்டுள்ளது. மேலும், 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் மற்றும் எர்டிகாவில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருவதும் சியாஸ் காருக்கு முக்கிய பலமாக இருக்கும்.

மிட்சைஸ் மார்க்கெட்டில் சிறந்த பிரிமியம் அம்சங்கள் கொண்ட மாடலாக இது இருக்கும். இதன்மூலம், மாருதியின் பட்ஜெட் கார் தயாரிப்பாளர் என்ற இமேஜை மாற்றும் சக்தி சியாஸ் காருக்கு இருப்பதாக கருதப்படுகிறது. சியாஸ் காரைத் தொடர்ந்து புதிய எஸ் கிளாஸ் கிராஸ்ஓவர் மாடலையும் மாருதி விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இந்த காரும் மாருதிக்கு புதிய அந்தஸ்தை பெற்றுத் தரும் என்று கருதப்படுகிறது.

சிறந்த பட்ஜெட் ஹேட்ச்பேக் கார்களை வழங்குவதோடு, பிற செக்மென்ட்டிலும் தன்னால் சிறந்த கார்களை வழங்க முடியும் என்பதை காட்டும் விதத்தில் தனது எதிர்கால வர்த்தக கொள்கைகளை மாருதி வகுத்து வருகிறது. அந்த வகையில், இனி வரும் மாருதி கார்கள் அனைத்து விதத்திலும் சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 12, 2014, 11:16 [IST]
English summary
Maruti Suzuki India is trying to change its image by not only playing in the hatchback segment. At the recent 2014 Auto Expo that was held in New Delhi the Japanese manufacturer revealed its concept model of Ciaz sedan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+