3 நாட்களில் 3,000 முன்பதிவு... புதிய மாருதி சியாஸ் அசத்தல்!
முன்பதிவு துவங்கப்பட்டு மூன்று நாட்களில் புதிய மாருதி சியாஸ் செடான் காருக்கு 3,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
மிட்சைஸ் செக்மென்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல் மாருதி சியாஸ். மாருதி எஸ்எக்ஸ்-4 காருக்கு மாற்றாக இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் இந்த புதிய கார் வர இருக்கிறது. மேலும், முற்றிலும் புதிய டிசைன், கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாருதியின் பிராண்டு மதிப்பை உயர்த்த வரும் மாடலாக குறிப்பிடப்படுகிறது.
அடுத்த மாத மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள இந்த காருக்கு மூன்று நாட்களுக்கு முன் முன்பதிவு துவங்கப்பட்டது. இந்த நிலையில், புதிய மாருதி சியாஸ் காருக்கு அமோக முன்பதிவு கிடைத்துள்ளது. விலை உள்ளிட்ட விபரங்கள் தெரியாத நிலையிலும், இதுவரை 12,000 பேர் இந்த கார் பற்றி விசாரணை செய்துள்ளனர்.
அதில், 3,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக மாருதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.7.19 லட்சம் ஆரம்ப விலையில் வர இருக்கும் இந்த புதிய கார் ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








