மாருதி சியாஸ் செடான் கார் உற்பத்தி சோதனை முறையில் துவங்கியது!
புதிய மாருதி சியாஸ் செடான் காரின் உற்பத்தி சோதனை முறையில் வெற்றிகரமாக நடந்துள்ளதையடுத்து, அந்த காரை மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மாருதி முழு வீச்சில் துவங்கியுள்ளது.
ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மார்க்கெட்டை குறிவைத்துத்தான் இந்த புதிய காரை விற்பனைக்கு விடவுள்ளது மாருதி. டிசைனில் முற்றிலும் புதிய மாடலாக வரும் இந்த கார் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

விற்பனை எப்போது?
வரும் ஜூலை- செப்டம்பர் இடையிலான காலத்தில் இந்த புதிய சியாஸ் செடான் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது உறுதியாகியுள்ளது. பண்டிகை காலத்தில் இந்த புதிய கார் மார்க்கெட்டில் இருக்கும்.

எஸ்எக்ஸ்-4.,க்கு குட்பை
எஸ்எக்ஸ்-4 செடான் காரின் உற்பத்திக்கு மாருதி குட்பை சொல்லிவிட்டது. அதற்கு மாற்றாக வரும் புதிய சியாஸ் செடான் காரின் உற்பத்தியையும் சோதனை முறையில் நடத்தி பார்த்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எஞ்சின் ஆப்ஷன்கள்
1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின், 1.4 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல்களில் முதலில் விற்பனைக்கு வருகிறது. பின்னர், 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

விலை
கடந்த 2007ம் ஆண்டு விற்பனைக்கு வந்த எஸ்எக்ஸ்- 4 செடான் கார் ரூ.7.14 லட்சம் முதல் ரூ.9.53 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாருதி கார்களில் இதுதான் விலை அதிகம் கொண்ட மாடல். இதுதவிர, கிராண்ட் விட்டாரா மற்றும் கிசாஷி ஆகியவை மாருதியின் இறக்குமதி மாடல்கள்.


Click it and Unblock the Notifications








