எதிர்பார்த்ததுக்கு முன்பாகவே வரும் புதிய மாருதி சியாஸ் செடான் கார்
எதிர்பார்த்ததுக்கு முன்னதாகவே புதிய மாருதி சியாஸ் செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக மாருதி சியாஸ் செடான் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. டிசைன் கவர்ச்சியாக இருந்ததால் மாருதி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எஸ்எக்ஸ்-4 காருக்கு மாற்றாக சியாஸ் செடான் காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மாருதி. பண்டிகை கால விற்பனையில் இந்த புதிய மாடலையும் இறக்கிவிட மாருதி முடிவு செய்துள்ளது.
இதற்கு தகுந்தாற்போல் ஓரிரு வாரங்களில் இந்த புதிய காருக்கு முன்பதிவு துவங்கிவிடவும் முடிவு செய்துள்ளது. பெட்ரோல், டீசல் மாடல்களில் விற்பனைக்கு வரும் இந்த காரில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தவிர்த்து, சிவிடி டிரான்ஸ்மிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிட்சைஸ் மார்க்கெட்டில் தற்போது மாருதியின் புதிய சியாஸ் கார் சலசலப்பை ஏற்படுத்த வருகிறது. ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








