புதிய மாருதி சியாஸ் செடான் காரின் படங்கள் மற்றும் விபரங்கள் வெளியானது
புதிய மாருதி சியாஸ் செடான் காரின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இந்த புதிய கார் மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்கும் என கருதப்படுகிறது.
எஸ்எக்ஸ்- 4 காருக்கு மாற்றாக வரும் இந்த புதிய மிட்சைஸ் செடான் கார் டிசைனிலும், வசதிகளிலும் பல படிகள் முன்னேறியிருக்கிறது. மாருதி சியாஸ் காரின் படங்கள் மற்றும் சில கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்
கடந்த ஆண்டு ஷாங்காய் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சுஸுகி நிறுவனத்தின் ஆந்தென்டிக்ஸ் கான்செப்ட் காரின் அடிப்படையில் இந்த புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஹெட்லைட் டிசைன், டெயில்லைட்டுகள் வாடிக்கையாளர்களை கவரும்.

எஞ்சின் ஆப்ஷன்
புதிய மாருதி சியாஸ் காரில் 94 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.4 லிட்டர் கே14பி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 89 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.3லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

புரொஜெக்டர் ஹெட்லைட்
இந்த புதிய காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேரியண்ட்டுகள்
மாருதியின் பிற கார்களை போன்றே பெட்ரோல் மற்றும் டீசல் என தலா 3 வேரியண்ட்டுகளில் விற்பனக்கு வர இருக்கிறது. ஆனால், மாருதியின் பிற கார்களில் உள்ளது போன்று Lxi மற்றும் Ldi வேரியண்ட்டுகள் இருக்காது. அதற்கு பதிலாக Vxi, Vxi+ மற்றும் ZXi ஆகிய பெட்ரோல் வேரியண்ட்டுகளிலும், VDi, VDi+ மற்றும் ZDi ஆகிய டீசல் வேரியண்ட்டுகளிலும் வர இருக்கிறது.

பேஸ் மாடல்
பேஸ் மாடலில்(VXi/VDi) பல்வேறு கவர்ச்சிகர வசதிகள் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. ரியர் ஏசி வென்ட்டுகள், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் ரியர் வியூ மிரர்கள், மியூசிக் சிஸ்டம், டியூவல் டோன் டேஷ்போர்டு ஆகியவை சில அம்சங்களாக குறிப்பிடலாம்.

மிட் வேரியண்ட்
மிட் வேரியண்ட்டில்(VXi+/VDi+) ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி கொண்ட டிரைவர் இருக்கை, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் ஏபிஎஸ் ஆகியவை நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும்.

டாப் வேரியண்ட்
டாப் வேரியண்ட்டில்(ZXi/ZDi) டியூவல் ஏர்பேக்குகள், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், 16 இஞ்ச் அலாய் வீல்கள், 5 இஞ்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் பகலிரவு ரியர் வியூ மிரர் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








