கூடுதல் மைலேஜ், அதிக பவரை அளிக்கும் எஞ்சினுடன் வரும் வேகன்- ஆர்!

By Saravana

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் 4வது இடத்திற்கு அதிபதியான மாருதி வேகன்- ஆர் காரில் அவ்வப்போது மாறுதல்கள் செய்யப்பட்டு ஃபேஸ்லிஃப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

அதுபோன்று மீண்டும் ஒரு வேகன் ஆர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வருகிறது. வேகன் ஆர் காரில் வாடிக்கையாளர்களை கவரும் கூடுதல் அம்சங்களை சேர்த்து இந்த முறை வெளியிட மாருதி மற்றும் அதன் தாய் நிறுவனமான சுஸுகியும் முடிவு செய்துள்ளன.


டிசைன்

டிசைன்

வழக்கம்போல் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சில டிசைன் மாறுதல்களை செய்து கவர்ச்சி கூட்ட மாருதி சுஸுகி முடிவு செய்துள்ளது. கிரில், ஹெட்லைட், டெயில்லைட் ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கும். வேகன் ஆர் ஸ்டிங்ரே மாடலில் இருந்து சில டிசைன் அம்சங்களை இந்த புதிய மாடலில் பயன்படுத்த உள்ளனர். இதன்மூலம், தற்போதைய மாடலைவிட அதிக கவர்ச்சி கொண்டதாக இருக்கும்.

கூடுதல் பவர்

கூடுதல் பவர்

டிசைன் மாற்றங்கள் மட்டுமின்றி எஞ்சினில் சில மாறுதல்களை செய்து வேகன்- ஆர் காரை அறிமுகம் செய்ய சுஸுகி எஞ்சினியர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது இருக்கும் 1.0 லிட்டர் எஞ்சினில் சில மாற்றங்கள் செய்து அதிக மைலேஜ் மற்றும் கூடுதல் பவர் கொண்டதாக மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் வசதிகள்

கூடுதல் வசதிகள்

இன்டிரியரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். மேலும், வாடிக்கையாளர்கள் விரும்பும் சில கூடுதல் வசதிகளையும் வேகன் ஆர் காரல் சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.

அறிமுகம்?

அறிமுகம்?

அடுத்த ஆண்டு துவக்கத்தில் மாருதி வேகன்- ஆர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய மாடல் தொடர்ந்து தனது விற்பனையை தக்க வைத்துக் கொள்ளும் என மாருதி நம்புகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, June 20, 2014, 11:16 [IST]
English summary
In an attempt to bring back customers to its Wagon R hatchback, the Japanese manufacture is being believed working on a better performing vehicle. When they say performing, it does not mean higher speed or a bigger engine. The engineers at Suzuki will be improving the fuel efficiency and reliability of the en
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+