5 லட்ச ரூபாய் மார்க்கெட்டிலிருந்து 10 லட்ச ரூபாய் கார் மார்க்கெட்டிற்கு மாறும் மாருதி!

எதிர்காலத்துக்கான வர்த்தகக் கொள்கைகளில் அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறது மாருதி கார் நிறுவனம். இதுவரை 5 லட்ச ரூபாய் கார் மார்க்கெட்டில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

சந்தையின் போக்கை மனதில் கொண்டு இனி 10 லட்ச ரூபாய் கார் மார்க்கெட்டில் தீவிர கவனத்தை செலுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, 4 முத்தாய்ப்பான கார் மாடல்களை நிலைநிறுத்துகிறது மாருதி.


 விலை கொள்கை

விலை கொள்கை

ரூ.6 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் மார்க்கெட்டில் 4 புதிய கார்களை நிலைநிறுத்துகிறது மாருதி. இந்த கார்களின் டீசல் மாடலின் நடுத்தர வேரியண்ட் ரூ.10 லட்சத்தையொட்டிதாக இருக்கும். மினி எஸ்யூவி உள்பட அந்த 4 புதிய கார்களின் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

புதிய மினி எஸ்யூவி

புதிய மினி எஸ்யூவி

கடந்த 2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக வைக்கப்பட்டிருந்த எக்ஸ்ஏ ஆல்ஃபா என்ற காம்பேக்ட் எஸ்யூவியை ஒய்பிஏ என்ற குறியீட்டுப்பெயரில் தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான பணிகளில் மாருதி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த புதிய எஸ்யூவி ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சத்திற்குள்ளான விலையில் வரும். இது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு நேர் போட்டியை தரும். 2016ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

பிரிமியம் ஹேட்ச்பேக் கார்

பிரிமியம் ஹேட்ச்பேக் கார்

ஹூண்டாய் ஐ20, விரைவில் வரும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு இணையான ரகத்தில் புதிய பிரமியம் ஹேட்ச்பேக் காரை ஒய்ஆர்ஏ என்ற பெயரில் மாருதி வடிவமைத்து வருகிறது. ஸ்விஃப்ட் காரைவிட கூடுதல் விலை கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்படும். ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் விலையில் வருகிறது. 2016ம் ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மிட்சைஸ் செடான்

மிட்சைஸ் செடான்

ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியை கொடுக்கும் டிசைன் மற்றும் வசதிகளுடன் புதிய சியாஸ் செடான் காரை வரும் செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மாருதி. ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் விலையில் வருகிறது.

புதிய கிராஸ்ஓவர் மாடல்

புதிய கிராஸ்ஓவர் மாடல்

ரெனோ டஸ்ட்டருக்கு போட்டியாக புதிய கிராஸ்ஓவர் மாடலை மாருதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய கார் ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் விலையில் வருகிறது.

வலுவான வர்த்தகம்

வலுவான வர்த்தகம்

தனது வலுவான வர்த்தகத்தை தொடர்ந்து தக்க வைக்கும் விதத்தில் பல புதிய கார் மாடல்களை மாருதி வரிசைக்கட்ட இருக்கிறது. அதில், இந்த புதிய மாடல்கள் சேரும்போது விற்பனை வெகுவாக அதிகரிக்கும் என அந்த நிறுவனம் கணக்கு போட்டுள்ளது.

Source: ET

More from DriveSpark

Article Published On: Wednesday, June 25, 2014, 14:27 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+