செலிரியோவின் ஏஎம்டி மாடலை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் குட் நியூஸ்!!
மாருதி செலிரியோ காரின் ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷன் மாடலின் உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது. எனவே, இந்த காருக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது,
கடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி செலிரியோ காருக்கு இதுவரை 57,800 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில், 25,000 பேர் ஏஎம்டி என்று அழைக்கப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலுக்கு முன்பதிவு செய்தனர்.

இதில், செலிரியோ ஏஎம்டி மாடலில் 7,000 கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன. மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட 22,000 செலிரியோ கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், செலிரியோ ஏஎம்டி மாடலுக்கான காத்திருப்பு காலத்தை குறைக்கும் விதத்திலும், தேவையை கருதியும் செலிரியோ ஏஎம்டி மாடலின் உற்பத்தியை அதிகரிக்கப்படுவதாக மாருதி தெரிவித்துள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் மாதத்திற்கு 4,500 செலிரியோ ஏஎம்டி மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. தற்போது அதனை மாதத்திற்கு 6,500 என்று அதிகரிக்கப்படுவதாக மாருதி தெரிவித்துள்ளது.
இதனால், செலிரியோ ஏஎம்டி காரை முன்பதிவு செய்துள்ளவர்கள் கூடிய விரைவில் காரை டெலிவிரி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், புதிதாக முன்பதிவு செய்பவர்களுக்கும் குறைந்த காத்திருப்பு காலத்தில் செலிரியோ ஏஎம்டி மாடலை பெறலாம். ரூ.4.14 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி செலிரியோவின் ஏஎம்டி மாடல் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








