மாருதி வேகன் ஆர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்

மாருதி வேகன் ஆர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட், டிசையர் கார்களை தொடர்ந்து வேகன் ஆர் காருக்கும் சிறப்பு ஆக்சஸெரீஸ் கொண்டதாக லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Maruti Wagon R

மாருதி வேகன் ஆர் க்ரெஸ்ட் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய வேகன் ஆர் மாடலில் 10 சிறப்பு ஆக்சஸெரீஸ் கொண்டதாக வந்துள்ளது.

பாடி கிராஃபிக் ஸ்டிக்கர், வீல் கவர், புதிய முன்பக்க கிரில், புதிய சீட் கவர்கள், ஸ்டீயரிங் வீல் கவர், தரைவிரிப்புகள், மட் பிளாப், கீ லெஸ் சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீஸ் உள்ளன.

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டிஜிட்டல் டிஸ்ப்ளே, புளுடூத், ஸ்பீக்கர்கள் கொண்ட டபுள் டின் ஆடியோ சிஸ்டம் ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்த கூடுதல் ஆக்சஸெரீஸ் மதிப்பு ரூ.32,500 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பண்டிகை காலத்தையொட்டி, இந்த ஆக்சஸெரீஸ்களை ரூ.10,000 தள்ளுபடியுடன் ரூ.22,500 விலையில் மாருதி வழங்குகிறது.

மாருதி வேகன் ஆர் காரில் 68 பிஎஸ் பவரை அளிக்கும் 1.0 லிட்டர் கே சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 26.6 கிமீ மைலேஜையும், எல்பிஜி மாடல் லிட்டருக்கு 14.6 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 23, 2014, 8:48 [IST]
English summary
Maruti Suzuki has launched a new limited edition model in its popular hatchback WagonR. Called the WagonR Krest, it gets a host of additional features like a new front grille, slightly redone front bumper and a set of body graphics. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+