செலிரியோ போன்று ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுடன் வருகிறதா ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்?
வரும் ஜூலை மாதம் மாருதி ஸ்விஃப்ட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தற்போது வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் பண்டிகை காலத்தில் மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக முந்தைய செய்திகள் தெரிவித்தன. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வருவதாக சமீபத்திய தகவல் கூறுகிறது.

ஹூண்டாய் ஐ20 காரில் இருப்பது போன்றே பனி விளக்குகள் அறையுடன் இணைந்த பகல்நேர ரன்னிங் விளக்குகள், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மென்ட் வசதி கொண்ட ரியர் வியூ கண்ணாடிகள் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிகிறது.
இன்டிரியரை பொறுத்தவரையில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி, புளூடூத் வசதியுடன் ஆடியோ சிஸ்டம், டியூவல் டோன் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை குறிப்பிட்டு கூறலாம். எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும்.
மேலும், செலிரியோவில் உள்ளது போன்று ஆட்டோமேட்டட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாகவும் வர இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை, ஏஎம்டி டிரான்ஸ்மிஷனில் வெளியிடப்பட்டால், அது ஸ்விஃப்ட் காருக்கு மிகப்பெரிய பலமாக அமையும். இதுதவிர, பண்டிகை காலத்தில் எஸ்எக்ஸ்4 காருக்கு மாற்றாக சியாஸ் செடான் காரும் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








