மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய வேகன்-ஆர்: மாருதி தீவிரம்
மாருதியின் அதிகம் விற்பனையாகும் மாடலான வேகன்-ஆர் காருக்கு மீண்டும் புதுப்பொலிவு கொடுக்கும் பணிகளை மாருதி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் அதிக மாற்றங்களை செய்வதோடு, செலிரியோவை போன்று ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலிலும் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அதிக சக்தி கொண்ட பெட்ரோல் எஞ்சினையும் வேகன் ஆர் காரில் பொருத்தி 2015 மாடலாக வெளியிட மாருதி முடிவு செய்துள்ளது.
இதன்மூலம், செலிரியோ காருக்கு இருக்கும் வெயிட்டிங் பீரியடால் முகம் சுளிக்கும் வாடிக்கையாளர்களை வேகன் ஆரை வைத்து வளைத்து விடலாம் என்று மாருதி நம்புகிறது.
மேலும், அந்த காருக்கான வெயிட்டிங் பீரியடும் வெகுவாக குறையும் என்று மாருதி நம்புகிறது. டிசைனில் மாற்றங்கள் செய்தாலும் தொடர்ந்து டால் பாய் டிசைனிலேயே புதிய வேகன் ஆர் காரும் வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








