கிராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கிய 'மேட் இன் இந்தியா' ஸ்விஃப்ட், டட்சன் கோ கார்கள்!
lபாதுகாப்பு தர ஆய்வுக்காக நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டட்சன் கோ கார்கள் தர மதிப்பீட்டில், ஒரு நட்சத்திரத்தை கூட பெறாமல் பூஜ்யம் வாங்கியுள்ளன. இது ஸ்விஃப்ட் மற்றும் டட்சன் கோ கார் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோமொபைல் ஆக்சஸெரீஸ் மீது 75 சதவீதம் தள்ளுபடி- விபரம்!
பெரிதும் விரும்பப்படும் மாருதி ஸ்விஃப்ட் கார் குறைந்தபட்ச மதிப்பீடுகளை கூட பெறாமல் பூஜ்யத்தை பெற்றிருப்பதுதான் அதிர்ச்சியிலும், அதிர்ச்சி. இதேபோன்று, டட்சன் கோ காரும் சோதனையில் மிக மோசமாக பாதிப்படைந்ததாக குளோபல் என்சிஏபி அமைப்பு தெரிவித்துள்ளது.

வேதனை தந்த சோதனை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டட்சன் கோ கார்களை குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது. இரண்டு கார்களிலும் ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் வசதி கிடையாது.

சின்னாபின்னமான ஸ்விஃப்ட்
ஏர்பேக் வசதி இல்லாத நிலையில், காரின் முன்புற கட்டமைப்பை பார்க்கும் விதத்தில் மணிக்கு 64 கிமீ வேகத்தில் தடுப்பு மீது காரை மோதி சோதனை செய்தனர். மனித பொம்மைகளை காரில் பொருத்தி பாதிப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது, மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டட்சன் கோ கார்கள் மோதிய வேகத்தில் கார் உருக்குலைந்தது. மோதல் சோதனை ஆய்வின் முடிவில் குளோபல் என்சிஏபி அமைப்பு இரண்டு கார்களுக்கும் பூஜ்யம் மதிப்பெண் கொடுத்தது. அதேவேளை, ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட ஸ்விஃப்ட் கார் கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருப்பதை நினைவுகூறத்தக்கது.

கோ நிலைமை மோசம்
கோ காரின் கட்டமைப்பு மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்படும்போது ஓட்டுனருக்கு மட்டுமின்றி, பின்புற பயணிகளுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பு ஏர்பேக் பொருத்தினாலும், ஓட்டுனருக்கு பாதுகாப்பை வழங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு
குழந்தைகள் பாதுகாப்பு அம்சத்தில் ஸ்விஃப்ட் கார் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும், டட்சன் கோ கார் இரண்டு நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது.

பாதுகாப்பு அச்சம்
சில மாதங்களுக்கு முன்னர் டாடா நானோ, மாருதி ஆல்ட்டோ கே10, ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு ஃபிகோ, ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்ட நம் நாட்டில் தயாரான கார்களை குளோபல் என்சிஏபி அமைப்பு மோதல் சோதனை நடத்தி, அதன் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தது. அதில், கட்டுமானத்திற்கு பெயர் பெற்ற ஃபோக்ஸ்வேகன் போலோ உள்பட அனைத்து கார்களும் சோதனையில் பல்பு வாங்கின. இது இந்திய கார் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், அதிகம் விரும்பப்படும் ஸ்விஃப்ட் மற்றும் டட்சன் கோ கார்களும் பூஜ்யம் வாங்கியிருப்பது நம் நாட்டில் தயாரிக்கப்படும் கார்களின் பாதுகாப்பு அம்சங்கள் பீதியை கிளப்பியுள்ளது.
எச்சரிக்கை
ந்தியாவில் கார்கள் எண்ணிக்கை வெகுவேகமாக அதிகரித்து வரும் நிலையில், கார் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆட்டோமொபைல் வல்லுனர்கள் எச்சரிக்கை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அடிப்படை பாதுகாப்பு விஷயங்கள் குறித்து தெளிவான கொள்கைகளை கார் நிறுவனங்கள் வகுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








