மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் உற்பத்தி துவங்கியது: 'கூல்' வசதிகளுடன் வருகிறது
போட்டியாளர்களான ஹூண்டாய் எலைட் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ, ஃபியட் புன்ட்டோ எவோ கார்கள் மேம்படுத்தப்பட்டு, புதுப்பொலிவுடன் விற்பனைக்கு வந்துவிட்டன. இந்த நெருக்கடியை தவிர்க்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இந்தநிலையில், புதிய ஸ்விஃப்ட் மாடலின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதால், ஸ்விஃப்ட் வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் ஆவல் எகிறியுள்ளது. வெளிப்புறம், உட்புறத்தில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது.

புதிய அலாய் வீல்கள்
ஸ்விஃப்ட் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலின் டாப் வேரியண்ட்டுகளில் புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், மிட்வேரியண்ட்டில் புதிய டிசைன் வீல் கேப்புகள் பொருத்தப்பட்டிருக்கும்.

பகல்நேர ரன்னிங் விளக்குகள்
ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மற்றொரு முக்கிய அம்சம் எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கும். பேஸ் மாடலை தவிர்த்தும், மிட் வேரியண்ட் மற்றும் டாப் வேரியண்ட்டுகளில் எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் வருகிறது.

குரோம் கைப்பிடிகள் ஆப்ஷனல்
மிட்வேரியண்ட் மற்றும் டாப் வேரியண்ட்டுகள் பாடி கலர் கைப்பிடிகள் அல்லது குரோம் பூச்சு கொண்ட கைப்பிடிகள் கொண்டதாக தேர்வு செய்து கொள்ளலாம். பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்கள் குரோம் பூச்சு கொண்ட கைப்பிடிகளையே விரும்புகின்றனர்.

டாப் வேரியண்ட் சிறப்பம்சங்கள்
மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட்டில் டிரைவர் பக்கத்தில் ஆட்டோமேட்டிக் பவர் விண்டோ, கீ லெஸ் என்ட்ரி, எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் ரியர் வியூ கண்ணாடிகள் போன்ற வசதிகள் இருக்கும். ஐரோப்பிய மாடலில் உள்ளது போன்று ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியும் இருக்கும் என்று கூறும் தகவல் ஆவலை அதிகப்படுத்துகிறது.

எதிர்பார்க்கும் விலை
ரூ.4.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








