மாருதி சுஸுகி எஸ் கிராஸ் எஸ்யூவி அறிமுகம் - படங்கள்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் முதல் நிகழ்ச்சியில் மாருதி நிறுவனத்தின் 2 புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
மாருதி சுஸுகி எஸ் கிராஸ் கிராஸ்ஓவர் மற்றும் சியாஸ் என்ற புத்தம் புதிய பிரிமியம் செடான் காரின் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டன. இங்கே எஸ் கிராஸ் கிராஸ்ஓவரின் படங்கள் மற்றும் சில விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு ரிலீஸ் மாடல்
பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட சுஸுகி எஸ்எக்ஸ்-4 கிராஸ்ஓவருக்கு மாற்றாக வந்த புதிய மாடல்தான் சுஸுகி எஸ் கிராஸ் கிராஸ்ஓவர். சமீபத்தில் ஆஸ்திரேலிய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

வடிவமைப்பு
4.3 மீட்டர் நீளம் கொண்ட இந்த எஸ்யூவி சுஸுகியின் தற்போதைய எஸ்எக்ஸ்4 கிராஸ்ஓவரைவிட கூடுதல் அகலம் மற்றும் குறைவான உயரம் கொண்டது. மேலும், 100 கிலோ வரை எடை குறைந்துள்ளது.

எஞ்சின்
ஆஸ்திரேலிய மார்க்கெட்டில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது.

அம்சங்கள்
இந்த புதிய எஸ்யூவி 16 இஞ்ச் அலாய் வீல்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ரூஃப் ரெயில், அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங் என பல அம்சங்களை கொண்டிருக்கிறது.

5 ஸ்டார் ரேட்டிங்
யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கிறது. 4.3 மீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது, ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல்களுடன் போட்டி போடும். இந்த காரின் முழு விபரங்களை விரைவில் வழங்குகிறோம்.


Click it and Unblock the Notifications








