மாருதி எஸ்எக்ஸ்4 காருக்கு மாற்றாக வரும் அசத்தலான புதிய செடான் அறிமுகம்!
மாருதி எஸ்எக்ஸ்-4 செடான் காருக்கு மாற்றாக வரும் புதிய செடான் காரின் கான்செப்ட்டை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி அறிமுகம் செய்துள்ளது.
சியாஸ் என்று அழைக்கப்படும் இந்த புதிய செடான் கான்செப்ட் டிசைன் மிக அசத்தலாக இருக்கிறது. படங்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளன.

டிசைன்
புதிய டிசைன் மற்றும் சிறந்த இன்டிரியருடன் புதிய சியாஸ் செடான் வருகிறது. மிக கவர்ச்சியாக இருக்கிறது.

எஞ்சின்
மாருதி எர்டிகா எம்பிவி காரில் இருக்கும் அதே எஞ்சின்கள் இதிலும் பயன்படுத்தப்படும். 1.4 லிட்டர் கே சீரிஸ் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் சியாஸ் வரும்.

கிளட்ச்லெஸ் டிரான்ஸ்மிஷன்
செலிரியோ போன்றே இந்த காரிலும் கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வருகிறது.

விற்பனை
இந்த ஆண்டின் இரண்டாவது பிற்பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

போட்டியாளர்கள்
புதிய ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு போட்டியாக வரும்.


Click it and Unblock the Notifications








