இதுவரை இல்லாத உச்சபட்ச விற்பனையை பதிவு செய்த மாருதி வேகன் ஆர்
இதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனையை கடந்த ஜூன் மாதம் மாருதி வேகன் ஆர் கார் பதிவு செய்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு பின் கார் மார்க்கெட்டில் சற்று வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. உற்பத்தி வரிச்சலுகை காலக்கெடு முடிய இருந்ததும், கார் நிறுவனங்கள் கொடுத்த கவர்ச்சிகர சலுகைகள் காரணமாக கார் விற்பனை நல்ல வளர்ச்சியை பதிவு செய்தது.

மேலும், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதியும் கடந்த மாதம் 31 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்தது. மேலும், அந்த நிறுவனங்களின் ஆல்ட்டோ மற்றும் வேகன் ஆர் கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது.
கடந்த மாதம் ஆல்ட்டோ வரிசை கார்களின் விற்பனை 30,000ஐ தொட்டது. இதேபோன்று, வேகன் ஆர் காரின் விற்பனை 17,000ஐ தொட்டு புதிய உச்சபட்ச விற்பனையை பதிவு செய்தது. இதனால், மாருதிக்கு புதுத்தெம்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக, வேகன் ஆர் காரின் விற்பனை மாருதிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. கடந்த மாதம் மாருதியின் மார்க்கெட் பங்களிப்பு 45.8 சதவீதமாக இருந்தது.


Click it and Unblock the Notifications








