முன்னணி ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களுக்கு தரப்படும் தள்ளுபடி விபரம்!

By Saravana

விற்பனையில் மந்த நிலை இருந்தாலும், போட்டி அதிகமாகிவிட்டதால் இப்போது பெரும்பாலான கார்களுக்கு தொடர்ந்து ஏதாவது ஒரு சலுகைகள் வழங்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. புதிய கார் வாங்க செல்பவர்கள் சலுகை விபரங்களை தெரிந்துகொண்டு செல்லும்போது அதிக சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது.

தற்போது மார்க்கெட்டில் இருக்கும் பல முன்னணி ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார் மாடல்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகளை டீலர்களும், கார் தயாரிப்பாளர்கள் அதிக அளவில் வழங்குகின்றனர். அதுகுறித்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


ஆல்ட்டோ 800

ஆல்ட்டோ 800

விற்பனையில் 25 லட்சம் என்ற புதிய சாதனையை தொட்ட மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. டீலர்கள் சார்பில் ரூ.30,000 வரையில் வழங்கப்படுகிறது. மேலும், பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்தால் அதிகபட்சமாக ரூ.20,000 தள்ளுபடியை பெற முடியும்.

 செவர்லே பீட்

செவர்லே பீட்

செவர்லே பீட் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடியை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. தவிர்த்து எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.25,000 வரையிலும், கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு ரூ.3,000 வரையிலும் தள்ளுபடியை பெறலாம்.

ஹோண்டா பிரியோ

ஹோண்டா பிரியோ

2013ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு இருப்பில் தேங்கியிருக்கும் ஹோண்டா பிரியோ கார்களுக்கு ரூ.15,000 தள்ளுபடி கிடைக்கிறது. 2014ம் ஆண்டு மாடல் பிரியோ கார்களுக்கு ரூ.5,000 மதிப்புக்கு இலவச ஆக்சஸெரீஸ்களை மட்டும் பெறலாம்.

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோவின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் வழங்கபப்படுகிறது. இதன்மூலம், ரூ.30,000 வரை சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. தவிர, ரூ.6,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகைகையும், நீட்டிக்கப்பட்ட வாரண்டியில் பெட்ரோல் மாடலுக்கு ரூ.5,000 வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.8,000 வரையிலும் சேமிக்கும் வாய்ப்பும் உள்ளது.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா

புதிய ஹோண்டா சிட்டி கொடுத்த நெருக்கடியால் ஹூண்டாய் வெர்னா காருக்கு ரூ.30,000 வரை தள்ளுபடியை ஹூண்டாய் மோட்டார்ஸ் வழங்குகிறது. ஹூண்டாய் எலன்ட்ரா காருக்கு ரூ.45,000 வரையிலும், சொனாட்டா காருக்கு ரூ.1 லட்சம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ரேபிட் காருக்கு ரூ.1 லட்சம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோன்று, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு ரூ.75,000 வரையிலும், ஜெட்டா காருக்கு ரூ.75,000 வரையிலும் தள்ளுபடிகள் கொடுக்கப்படுகிறது.

நிசான் சன்னி

நிசான் சன்னி

2013ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நிசான் சன்னி காருக்கு ரூ.80,000 வரையில் தல்ளுபடி கிடைக்கிறது. 2014ம் ஆண்டு தயாரிப்பு சன்னி கார்களுக்கு ரூ.60,000 வரை தள்ளுபடிகளை பெற முடியும்.

ஃபோர்டு கிளாசிக்

ஃபோர்டு கிளாசிக்

ஃபோர்டு கிளாசிக் காருக்கு ரூ.1 லட்சம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. டீலர்கள் சார்பில் 2014 மாடல் கிளாசிக் கார்களுக்கு ரூ.15,000 வழங்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, June 6, 2014, 10:50 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+