அசத்தும் மெக்லாரன் பி1 ஜிடிஆர் காரின் கான்செப்ட்

By Saravana

மெக்லாரன் பி1 ஜிடிஆர் காரின் டிசைன் கான்செப்ட் மாடலை மெக்லாரன் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த காரின் டீசர் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவில் நடந்த பெபுள் பீச் கான்கர்ஸ் டி' எலிகன்ஸ் ஆட்டோமொபைல் திருவிழாவில் வைத்து இந்த காரின் டிசைன் கான்செப்ட்டை மெக்லாரன் அறிமுககப்படுத்தியது. மெக்லாரன் பி1 காரின் டிராக் வெர்ஷன் மாடலாக இதனை டிசைன் செய்துள்ளனர். மெக்லாரன் பி1 ஜிடிஆர் என்ற பெயரில் இது அழைக்கப்படும்.

Mclaren P1 GTR

மெக்லாரன் பி1 காரின் 375 யூனிட்டுகளின் உற்பத்தி முடிந்த கையோடு, இந்த புதிய காரையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய மெக்லாரன் முடிவு செய்துள்ளது. பி1 காரைவிட பி1 ஜிடிஆர் கார் சிறப்பான சாலை பிடிமானம், பெர்ஃபார்மென்ஸ், ஏரோடைனமிக்ஸ் கொண்டதாகவும், டிரைவருக்கு ஏற்ற மிகச்சிறந்த அம்சங்களுடன் இந்த கார் இருக்கும் என்று மெக்லாரன் தெரிவித்துள்ளது.

ஃபார்முலா- 1 மற்றும் 24 ஹவர்ஸ் லீ மான்ஸ் ரேஸ்களில் இருக்கும் 50 ஆண்டுகால அனுபவத்தை வைத்துக் கொண்டு இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரை மிக அசத்தலாக டிசைன் செய்துள்ளனர் மெக்லாரன் நிறுவனத்தினர். பின்புறத்தில் பெரிய ஸ்பாய்லர், ரியர் டிபியூசர், இரட்டைக் குழல் எக்சாஸ்ட் பைப்புகள் போன்றவை மிக குறிப்பிடும்படியாக உள்ளன.

பி1 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 3.8 லிட்டர் வி8 ட்வின் டர்போ எஞ்சின்தான் இந்த புதிய பி1 ஜிடிஆர் காரிலும் பொருத்தப்பட்டிருக்கும். பி1 காரின் எஞ்சின் 887 எச்பி பவரை அளிக்கும் நிலையில், பி1 ஜிடிஆர் காரின் எஞ்சின் 985 எச்பி பவரை அளிக்கும் விதத்தில் டியூனிங் செய்யப்பட்டிருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 18, 2014, 9:23 [IST]
English summary
McLaren has been teasing its fans and followers with its P1 GTR. They had earlier revealed a few glimpses of the super car. Now they have finally pulled the covers off their P1 GTR, an ultra exclusive vehicle meant for track use.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+