2016 வரை பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி காருக்கான முன்பதிவு முடிந்தது!
சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி காருக்கு 2016 வரை முன்பதிவு முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பெர்ஃபார்மென்ஸ் கார் பிரிவான ஏஎம்ஜி நிறுவனம் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரைத் தொடர்ந்து சொந்த தொழில்நுட்பத்தில் தயாரித்த இரண்டாவது கார் மாடல் இது.

முன்புற எஞ்சின் கொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் கார் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்து இரண்டு மாதங்களாகும் நிலையில், இந்த காருக்கு 2016ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்வின் டர்போசார்ஜர் கொண்ட 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த கார் இரண்டு விதமான மாடல்களில் கிடைக்கும். 456 பிஎச்பி பவரை அளிக்கும் எஞ்சின் ஆப்ஷனிலும், 503 பிஎச்பி பவரை அளிக்கும் மற்றொரு மாடலிலும் கிடைக்கும்.
மணிக்கு 310 கிமீ அதிகபட்ச வேகம் கொண்ட இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் எட்டிவிடும். ஏஎம்ஜி ஜிடி கார் ஏஎம்ஜி டைனமிக் என்ற தொழில்நுட்ப வசதி உள்ளது. இதன்மூலம், 4 விதமான டிரைவிங் ஆப்ஷன்களை தேர்வு செய்து ஓட்ட முடியும்.


Click it and Unblock the Notifications








